97 வயதிலும் சாதனை படைத்த பிரிட்டனைச் சேர்ந்த பெட்டி ப்ரோமேஜ்!
பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி ப்ரோமேஜ், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி வான் சாகசத்தில் ஈடுபட்டு, தனது முந்தைய உலக சாதனையையே முறியடித்துள்ளார்.
விமானம் சுமார் 150 மைல் வேகத்தில் பறந்தபோது, ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவர் இந்த சாகசத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ‘உலகின் மிக வயதான பெண் விமான இறக்கை சாகச வீராங்கனை’ என்ற கின்னஸ் உலக சாதனையை அவர் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் தனது 93ஆவது வயதில் இதேபோன்ற சாகசத்தை மேற்கொண்டு சாதனை படைத்திருந்த பெட்டி ப்ரோமேஜ், தற்போது 97 வயதில் தனது சொந்த சாதனையையே முறியடித்துள்ளார்.
உடல்நலப் பாதிப்புகளை கடந்து மீண்டும் வானில் சாகசம் செய்துள்ள அவர், தனது இந்த முயற்சியின் மூலம் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவமனையின் பக்கவாதப் பிரிவுக்கு நிதி திரட்டும் நோக்கத்தையும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Font size:
Print
Related Posts
