“பாலஸ்தீன நாடு அமையாது!” – நெதன்யாகு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

“நான் இஸ்ரேலின் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன தனி நாடு அமையாது” – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கருத்து வெளியிட்ட நெதன்யாகு,

“நான் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகிக்கும் வரை, காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டிரம்ப் நிர்வாகத்தின் ‘அமைதி வாரியம்’ தயாரித்ததாகக் கூறப்படும் 15 அம்ச வரைவுத் திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்காது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் கைவிடும் வரை, காசாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தற்போதைய நிலைகளில் இருந்து பின்வாங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலியப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் எதிராக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தொடர்ந்து முறியடிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய இராணுவம் ஈடுபடும் என்றும் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

இதனால், அமெரிக்காவின் காசா அமைதித் திட்டம் தொடர்பாக இஸ்ரேலின் நிலைப்பாடு மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது