கனடாவில் அவசரநிலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மேற்கு கனடாவில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இருமடங்கிற்கும் அதிகமான பரப்பளவிற்கு விரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தற்போது சுமார் 23,500 ஏக்கர் பரப்பளவிற்கு காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், மாகாண அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தீப்பரவலால் ஆபத்து ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதுவரை கிட்டத்தட்ட 20,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு கனடாவில் காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது