கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆறுமுகம் சபேஸ்வரனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் புதன்கிழமை அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.
மறுநாள் வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, பின்னர் தகனக் கிரியைகளுக்காக அவரது பூதவுடல் கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளராகவும் ஆறுமுகம் சபேஸ்வரன் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக கனடாவில் தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்களை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
Font size:
Print
Related Posts
