கஞ்சிப்பானி இம்ரானின் மாமனார் சுட்டுக்கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கஞ்சிப்பானி இம்ரானின் மாமா என தெரிவிக்கப்படும் நபர் உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி. பாலம் அருகே இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் கஞ்சிப்பானி இம்ரானின் மாமா என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CCTV காட்சிகள் மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது