பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி, கைவிலங்கு இன்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஷாரா செவ்வந்தி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு சந்தேகநபர்கள் அழைத்துச் செல்லப்படும் போது பொதுவாக பாதுகாப்பு காரணங்களுக்காக கைவிலங்கு பயன்படுத்தப்படும் நிலையில், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, அவருக்கு ஏன் இவ்வாறு வேறுபட்ட முறையில் நடத்தப்படுகிறது என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி. காவலில் இருந்த காலப்பகுதியில் அவருக்கு கேக் வெட்டப்பட்டதாகவும், பிஸ்கட் வழங்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களும் முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
அந்த சம்பவங்கள் தொடர்பாக சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஷாரா செவ்வந்திக்கு மட்டும் ஏன் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றும், அவருக்கு பின்னால் செல்வாக்கு மிக்கவர்கள் யாரேனும் உள்ளனரா என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனினும், கைவிலங்கு பயன்படுத்தப்படாததற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், அது சட்டரீதியான சிறப்புச் சலுகையா அல்லது பாதுகாப்பு அதிகாரிகளின் முடிவா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இதனால், இஷாரா செவ்வந்தி தொடர்பான இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
Font size:
Print
Related Posts
