ஈரான் ஒரு வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ஈரானியர்களாகிய நீங்கள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளீர்கள். முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளீர்கள்” என அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும் இதுபோன்ற கருத்துகளை பலமுறை கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் அமெரிக்காவை இந்த அளவுக்கு எதிர்த்து நிற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது வலிமையையும் எதிர்த்து நிற்கும் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts
