மும்பையில் நிலச்சரிவு! 6 பேர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மும்பையில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள சிராக் நகர் பகுதியில் இன்று, ஆகஸ்ட் 12ஆம் திகதி அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த மூன்று வீடுகள் மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்ததுடன், அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இடிபாடுகளில் இருந்து ஆறு பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, இடிபாடுகளுக்கு அடியில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறியும் வகையில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது