ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்து ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கப்பலின் வழிகாட்டி அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டுமாயின், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளும் பொருளாதாரத் தடைகளும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்காவினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிராந்தியத்தில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சென் ரெஸாய் தெரிவித்துள்ளார்.

இதனால், உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது