துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பின்னர், தன்னை ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றிய நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், ட்ரம்ப் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து ரகசியமாக மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஈரானிடமிருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி விமான நிலையத்தில் ட்ரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய பின்னர், அந்த விமானம் புறப்படாமல் இருந்ததாகவும், பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரை உணவு மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மூலம் ரகசியமாக வேறு விமானத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனிடையே, இந்த ரகசிய நடவடிக்கையை ட்ரம்ப் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
தன்னை ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றும் முடிவு தனது பாதுகாப்பு பிரிவினரால் எடுக்கப்பட்ட முடிவு என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், தனக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்கள் தன்னை பயமுறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பயணங்களில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானதாக இருந்தாலும், ஈரானிடமிருந்து ஏற்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.
Font size:
Print
Related Posts
