அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணியில் யாழ் வீரர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் என்பவரே அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார்.

தாய்லாந்தில் நேற்று, 12ஆம் திகதி ஆரம்பமான நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில், அவர் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்றுள்ளார்.

சென். ஜோன்ஸ் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த ரத்னம் ரோஸி ஹரிந்த், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

பின்னர் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிரிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கராத்தே துறையில் ஆறாம் டான் தரத்தைப் பெற்றுள்ளதுடன், சென்செயாகவும் செயற்பட்டு வருகின்றார்.

மேலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கராத்தே பாடசாலைகள் ஊடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சர்வதேச அரங்கிற்கு சென்று, அவுஸ்திரேலிய தேசிய அணியில் இடம்பிடித்துள்ள ரத்னம் ரோஸி ஹரிந்தின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது