பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெக்கோ சமனின் தாயார், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய – உல்ஹிட்டியாவ பகுதியில் நேற்று, 15ஆம் திகதி மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் தாயார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது