ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த முற்றுகை நடவடிக்கைகளை மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை அமைத்துள்ள இந்த முற்றுகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரும்புச் சுவர் என வர்ணித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்கும் வரை கடல் வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
