மன அழுத்தத்தால் கரோலின் லீவிட் திடீர் விலகல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்த கரோலின் லீவிட், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் கூடுதல் நேரத்தை செலவிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

எனினும், கடுமையான பணிச்சுமை, தூக்கமின்மை மற்றும் அதிகரித்த பணியழுத்தம் ஆகியவையும் அவரது முடிவுக்கு காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலேயே மீண்டும் பணிக்குத் திரும்பிய லீவிட், பிரசவ விடுப்பில் இருந்தபோதே பதவியிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து அவரை தொடர்புகொண்டு பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை மாதம் மீண்டும் பணியில் இணைந்த பின்னரும், குடும்பப் பொறுப்புகளுக்கும் பணிக்கும் இடையே கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது பதவியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

எனினும், செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விலகினாலும், எதிர்வரும் இடைத்தேர்தல் பணிகளிலும் குடியரசுக் கட்சியின் முக்கிய ஆலோசகராகவும் கரோலின் லீவிட் தொடர்ந்து செயல்படுவார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது