கெஷ்ம் தீவு மாசுபாடு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஓமான் அருகே ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து ஈரானின் கெஷ்ம் தீவு கடலோரப் பகுதியில் எண்ணெய் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி, இந்த மாசுபாடு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான் கூறும் இராணுவ நடவடிக்கைகளே இந்த மாசுபாட்டிற்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, கரோலின் பெசெங்கி என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் ஓமான் அருகே சிக்கியதைத் தொடர்ந்து அதிலிருந்து எண்ணெய் கசிந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல் ஜூன் மாத இறுதியில் ஓமான் கடற்பகுதியில் தரைதட்டிய பின்னர், அதிலிருந்த எண்ணெய் கசிவு கடற்கரைப் பகுதிகளை நோக்கி பரவத் தொடங்கியுள்ளது.

இந்த கசிவு ஓமான் கடற்கரையையும் கடல் உயிரியல் வளங்கள் அதிகம் உள்ள பகுதிகளையும் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கரோலின் பெசெங்கி கப்பலில் ஏற்பட்ட கசிவுக்கும் கெஷ்ம் தீவு அருகே பதிவாகியுள்ள எண்ணெய் மாசுபாட்டுக்கும் இடையிலான நேரடி தொடர்பு இதுவரை தனித்தனியாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாக ஈரான் தனது நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக காசிம் கரீபாபாடி தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கப்பல் சம்பவங்களும் எண்ணெய் மாசுபாடுகளும், பிராந்தியத்தின் கடல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.
 


 

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது