லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபதியா மாவட்டத்தின் அன்சார் பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் ஜூன் மாதம் ஏற்பட்ட தற்காலிக அமைதி நிலைமையின் பின்னர் லெபனானில் பதிவான மிக மோசமான ஒற்றைத் தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்பை இலக்காகக் கொண்டே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும், லெபனான் தரப்பு உயிரிழந்தவர்கள் பொதுமக்கள் என்றும், அவர்கள் இராணுவ இலக்குகள் அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் அதிபர் ஜோசப் அவுன், தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு “தெளிவான செய்தியை” அனுப்புவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தெற்கு லெபனானில் மேலும் சில இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாகவும் பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
Font size:
Print
Related Posts
