துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் 6 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வீடுகளை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவத்துக்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக மிச்சிகன் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சந்தேகநபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது