1,000 கோல்களுக்கு இன்னும் 24!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

41 வயதான ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது சிறப்பான கால்பந்து பயணத்தை வரலாற்றுப் பெருமையுடன் நிறைவு செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம். ஒரு வரலாற்றுப் பெருமையுடன் விடைபெற விரும்புகிறேன்” என ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மற்றொரு முக்கிய இலக்கு, 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையாகும்.

கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளை இணைத்து இதுவரை 976 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, 1,000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 24 கோல்கள் மட்டுமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சவுதி அரேபியாவின் அல் நசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை 146 கோல்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், தனது கால்பந்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன் 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ எட்டுவாரா என்பது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது