ஓட்டலில் தீ! குழந்தை உட்பட 9 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள விடுதியில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் அமைந்துள்ள  விடுதி ஒன்றில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ வேகமாகப் பரவிய நிலையில்,  விடுதியில் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்திலிருந்து இந்தியா வந்திருந்த நிலையில், அவர்கள் குறித்த ஓட்டலில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தின்போது ஏற்பட்ட கடுமையான புகையை சுவாசித்ததால் பலர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மீட்புப் பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது