தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத்தமிழினத்திற்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கெதிராக தீர்ப்பாயத்தை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவருமான அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ (1944-2026) செவ்வாய்க்கிழமை (25) அன்று பொகோட்டாவில் காலமானார்.
2013-ல் நடைபெற்ற 'சிறிலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின்' (பிறேமன் அமர்வு) நடுவர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.
இவர் அருட்தந்தை பிரான்சுவா கூட்டாவுடன் இணைந்து தென்னமெரிக்கத் தூதுவராக இருந்த சிறிலங்காவின் முன்னைநாள் இராணுவத்தளபதி ஜகத் டயசின் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியவர் என்று பதியப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் தமிழினப்படுகொலை நினைவுநாளை நடாத்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
