சந்நிதி வேலவன் தேரில் பவனி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், கடந்த 13.08.2026 அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், இன்று (27) இரதோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, நள்ளிரவு 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ்ந்த நிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.


இன்று காலை 8.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் தேரில் எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற முருகத் தலங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் இரதோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.

தொடர்ந்து நாளை (28) நடைபெறவுள்ள கடல்த் தீர்த்தோற்சவத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது