அமெரிக்க தளங்களை குறிவைக்கும் ஹைப்பர்சோனிக்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.

வானில் பறந்து கொண்டே அமெரிக்காவின் அதிமுக்கிய உளவு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களைத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்களைச் சீனா ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 சீனாவின் இந்த ஆபத்தான ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ முதல் 8 ஆயிரம் கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் 'குவாம்' மற்றும் 'ஹவாய்' ராணுவத் தளங்களை நேரடியாகத் தாக்கும் வல்லமை கொண்டவை என உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

 ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் சென்று நடுவானில் தன் திசையைத் தானே மாற்றிக்கொள்ளும் இந்த விபரீத ஆயுதத்தை ரேடார்களால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தற்போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
 

ஹைப்பர்சோனிக் கிளைடு ஆயுதங்கள் மிக அதிக வேகத்தில் பயணிப்பதுடன், விமானப் பாதையை மாற்றும் திறன் கொண்டிருப்பதால் அவற்றைக் கண்டறிந்து எதிர்கொள்வது சவாலாக இருக்கலாம்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது