நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம் என்று ஈரான் புதிய எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.
போர் நிறுத்தம் முடிந்தவிட்ட தருணத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. வர்த்தக போரை அறிவித்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு செல்லும் நிதி ஆதாரங்களை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து இருந்தாலும் அதை உறுதியாக எதிர்ப்போம் என்று ஈரானும் கூறி இருந்தது.
இந் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம் என்று ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அமரிக்காவுடனான மோதல் கடுமையாக இருக்கும் என்றும் கூறி உள்ளது.
இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெசாய் கூறி உள்ளதாவது;
நெதன்யாகுவின் செயல்கள், ஆட்சியின் முடிவை நெருங்க செய்துவிட்டன. டிரம்ப் மகனை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக பொய்யான செய்திகளை பரப்பு டிரம்பை பீதியடைய செய்த நெதன்யாகு,அவரின் முடிவெடுக்கும் திறனை குலைத்துவிட்டார்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும். மோதல் மீண்டும் தொடங்கினால் நாங்கள் புதிய திட்டத்திற்கு தயாராகி வருகிறோம். எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு போரும் முந்தைய போர் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts
