வெனிசுலா எண்ணெய் மீது அமெரிக்காவின் பிடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் வெனிசுலா அரசுடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவின் எண்ணெய்த் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு ஈர்க்கப்படும் என்றும், அந்நாட்டு அரசுக்கு மிகப்பெரிய அளவில் வரி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளில் ஒன்றை கொண்டுள்ள வெனிசுலா, நீண்டகால முதலீட்டுப் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக அதன் முழு உற்பத்தித் திறனை பயன்படுத்த முடியாமல் உள்ளது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் பெட்ரோல் விலையை குறைக்க உதவும் என ட்ரம்ப் நிர்வாகம் கூறினாலும், வெனிசுலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை மீளக் கட்டமைத்து உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகளும் மிகப்பெரிய முதலீடும் தேவைப்படலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது