சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் மாநாடு இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப்பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்பதே போராட்டத்தில் பங்கேற்றவர்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
