ஈரானை தாக்கிய அமெரிக்கா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதப் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குதல் இதுவென தெரியவருகிறது.

ஹோர்முஸ் நீரிணைக்குள் கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஈரானியப் புரட்சிகரக் காவலர் படையினர் தயாராகிக் கொண்டிருந்ததை அடுத்து, இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பல ராணுவ வீரர்களும் குடிமக்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரானின் புரட்சிகரக் காவலர் படை, இதற்குத் தகுந்த “பதிலடியும் தண்டனையும்” வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேச கடல் பகுதியில் புதிய கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது