சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்கு புறம்பாக ஐவர் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் அவர்களை தனது தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த விசாரணைக்காக ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூன்று சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பெற அதிகாரிகள் முயற்சித்திருந்த போதிலும், அவர் அங்கு இருக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வேறு ஒரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையான அவரை பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது