லொரி - பஸ் மோதி விபத்து ; 27 மதகுருமார் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய சிம்பாப்வேயில் கனரக லொரி ஒன்று பஸ் மீது மோதியதில் 27 மதகுருமார் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மதகுருமார்  7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய சிம்பாப்வேயின் சிவு நகருக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில், 34 கிறிஸ்தவ மதகுருமாரை ஏற்றிக்கொண்டு பயணித்த சிறிய ரக பஸ்ஸை பின்னால் சென்றுகொண்டிருந்த லொரியானது முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

அவ்வேளை பஸ் மீது லொரி வேகமாக மோதியுள்ளது. லொரி மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 27 மதகுருமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஏனைய 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது