அமெரிக்காவின் மிகப் பெரிய ட்ரோனை சுட்டு வீழத்திய ஈரான்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இதனைதொடர்ந்து, மேற்படி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதனை ஈரானின் புரட்சிகர காவல் படை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள இரண்டு வான்படை தளங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள ஒரு தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது