களுத்துறை மாவட்டம், பயாகல அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயாகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் முக்கிய சந்தேக நபரான பானதுர நிலங்கவின் மைத்துனர் ‘திலா’ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும், பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கூறப்படும் ‘குடு சலிந்து’வின் குழுவினரால் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Font size:
Print
Related Posts
