வடமாநிலங்களில் முதலமைச்சர் விஜய்யின் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பையில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியிடமும் மோசடி செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரைச் சேர்ந்த மொஹரம் அலி என்ற இளைஞரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு, ‘US Bank’ என்ற பெயரில் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வந்த குரல் பதிவில், தாம் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பேசுவதாகவும், தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
மேலும், தனது அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 4 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையைப் பெறுவதற்கு வங்கி செயல்முறைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் 4 லட்சம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அந்தக் குரல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இது விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சைபர் மோசடி முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அறிமுகமற்ற நபர்களிடமிருந்து வரும் காசோலைகள், குரல் பதிவுகள் மற்றும் பணம் செலுத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ வழிகளில் தகவல்களை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Font size:
Print
Related Posts
