சற்றுமுன்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கொல்லையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச அரங்கத்திற்கு கதிரைகள் கொள்வனவு செய்தபோது, உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 79.7 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னாள் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு விசாரணைகள் மற்றும் வழக்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தற்போதைய கைது தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 

Related Posts