Font size:
Print
நுவரெலியா, நானுஓயா ரதல்ல கிளாஸ்கோ தோட்டம் அருகே அமைந்துள்ள நானுஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவத்தில் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களுடன் நானுஓயா ஓடையில் நீராடச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நானுஓயா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
