இடிந்து விழுந்த 6 மாடி மாணவர் விடுதி ; 50இற்கும் மேற்பட்டோர் இடிபாடுக்குள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களும் காலியாக்கப்பட்டு, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சிலர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தகவலின்படி, குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் கீழ்தளத்தில் கட்டுமான அல்லது புதுப்பிப்பு பணிகள் இடம்பெற்றிருந்ததாகவும், அது விபத்துக்கான காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், விபத்துக்கான இறுதி காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், அவர்களை உயிருடன் மீட்கும் நோக்கில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts