யாழ்ப்பாணம் – பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களின் தன்மை மற்றும் அளவு தொடர்பான மேலதிக தகவல்கள், அவற்றை பாதுகாப்பாக மீட்ட பின்னரே உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Font size:
Print
Related Posts
