எயார்பஸ் விசாரணையில் சமல் ராஜபக்ச! ஒரு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

இன்று செப்டெம்பர் 8ஆம் திகதி காலை சுமார் 10 மணியளவில் அவர் ஆணைக்குழு வளாகத்திற்கு வருகை தந்திருந்தார்.

எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே, சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், சமல் ராஜபக்ச ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

முன்னதாக செப்டெம்பர் 4ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அன்றைய தினம் ஆஜராக முடியாது என அவர் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்ததாகவும், பின்னர் இன்று ஆஜராகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே எயார்பஸ் கொள்வனவு விசாரணை தொடர்பாக சமல் ராஜபக்சவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

அவரை செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts