மட்டக்களப்பு கிரான் கூளாக்காடு பகுதியில் ஆலய உற்சவத்தின்போது இடம்பெற்ற வெடிபொருள் விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூஜை வழிபாடுகளின்போது பெரிய வெடியொன்று வெடிக்க வைக்கப்பட்டதாகவும், அது உடனடியாக வெடிக்காத நிலையில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த வெடியை பார்ப்பதற்காக சிறுவன் ஒருவர் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிரான் கூளாக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆலய உற்சவங்கள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது வெடிபொருட்களை கையாள்வதில் மிகுந்த பாதுகாப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
