புதிய வேன் தீக்கிரை! சாரதி படுகாயம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

களுத்துறை பகுதியில், மூன்று நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேன் ஒன்று தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கலப்புகம – பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேனை சாரதி இயக்க முற்பட்டபோது, அது இயங்காமல் போயுள்ளது.

இதையடுத்து, வேனை தள்ளிச் செல்ல முயன்றபோது திடீரென தீப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ வேகமாகப் பரவிய நிலையில், பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், தீயைக் கட்டுப்படுத்துவதற்குள் வேன் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீக்காயங்களுக்கு உள்ளான 52 வயதுடைய சாரதி, பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

புதியதாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் மூன்று நாட்களிலேயே தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேன் தீப்பற்றியதற்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts