நோர்வே போக்குவரத்து அமைச்சரான இலங்கைத் தமிழர் கம்சி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட கம்சி குணரட்ணம், நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் புதிய போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கம்சி குணரட்ணம், பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான அரசாங்கத்தில் இந்த முக்கிய அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதன் மூலம் நோர்வே அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழ் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் கவனம் பெற்றுள்ளார்.

அவர் நோர்வே அரசியலில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்துள்ளதுடன், தேசிய அரசியலிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

தற்போது போக்குவரத்து அமைச்சராக, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்குப் பொறுப்பானவராக அவர் செயற்படவுள்ளார்.

நோர்வே அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவை முழுமையாக தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணமும் அதில் முக்கிய அமைச்சுப் பொறுப்பை வகிக்கிறார்.

இலங்கைத் தமிழ் பின்னணியிலிருந்து நோர்வே அரசியலில் உயர்ந்து, தற்போது அந்நாட்டின் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் ஒன்றை ஏற்றுள்ள கம்சி குணரட்ணத்தின் இந்தப் பதவியேற்பு, உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts