தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, "இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமாகவே பிரயோகிக்கப்படும்.
பொதுப் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் எமக்கு எந்த இரக்கமும் இல்லை" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.
அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Font size:
Print
Related Posts
