கம்பஹாவில் பொலிஸ் துப்பாக்கிச்சூடு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வேனின் சாரதி காயமடைந்துள்ளதாக வெலிவேரிய  பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பிரதேசத்திற்கு வேன் ஒன்றின் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (12) தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது உடுகம்பொல நோக்கிப் பயணித்த குறித்த வேனை பொலிஸார் ஜீப் வண்டி மூலம் பின்தொடர்ந்துள்ளதுடன்,  மல்வத்த சந்தைப் பகுதியில் வேன் நிறுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் அதனைப் பரிசோதிக்க முற்பட்ட போது, சாரதி வேனை முன்னும் பின்னுமாக பல தடவைகள் செலுத்தி, பல வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், பொலிஸ் ஜீப் மீதும் மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது, பொலிஸார் வேனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சாரதி காயமடைந்துள்ளார்.

இதில், படுகாயமடைந்த சாரதி பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வேனில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 09 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts