முதியோர் இல்லத்தில் தீ - 16 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிலி நாட்டில் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் சிலியின் லா அரௌகானியா பிராந்தியத்தில் உள்ள  பிட்ருப்கியூன்  நகரில் முதியோர் இல்லம் இயங்கி வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இரவு, அந்த இல்லத்தில் சுமார் 26 பேர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு சுமார் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ, வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது.

தீயில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டுள்ளனர். எனினும், 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மீதமிருந்த 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சிலி பொலிஸார் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த முதியோர் இல்லத்தின் செயல்பாட்டு நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்திற்கு முன்னரே அந்த இல்லம் தொடர்பாக சுகாதார விதிமுறை சார்ந்த விசாரணைகள் இடம்பெற்றிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர தீ விபத்து சிலி நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 

Related Posts