சிங்கப்பூர் அருகே இரு கப்பல் மோதி விபத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

செப்டம்பர் 20, 2026 அன்று கடலில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூர் அருகே கடல் பகுதியில் சீனாவைச் சேர்ந்த “Luqing Yuanyu 108” என்ற மீன்பிடிக் கப்பல் மீது, பனாமா கொடியுடன் பயணித்த “First Margaux” என்ற சரக்குக் கப்பல் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கடல்சார் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்த அனைத்து கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு நிலை குறித்தும் அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணையின் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Related Posts