சிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள ஆயுத சேமிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகளில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலெப்போ நகருக்கு தெற்கே உள்ள அல்-ஈஸ் பகுதியில் அமைந்துள்ள சிரிய இராணுவ தளத்தில் இன்று அதிகாலை இந்த சக்திவாய்ந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இருந்து அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்புக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக வெடிப்புகள் இடம்பெற்றதால், மீட்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்தை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக சம்பவப் பகுதியைச் சுற்றியுள்ள சில வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்புக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள முழுமையான சேத விவரங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


 

Related Posts