தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 8 வாகனங்கள் விபத்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

களனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த ஆறு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts