சவுதி துறைமுகத்தை குறிவைத்து 6 ஏவுகணைகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டான்சானியாவில் இருந்து காங்கோ நோக்கிப் பயணித்த படகு டங்கனிகா ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டான்சானியாவின் கிகோமா நகரிலிருந்து காங்கோவின் கலெமி நகரை நோக்கிப் பயணித்த இந்தப் படகு, மபேரா கிராமத்திற்கு அருகில் கவிழ்ந்துள்ளது.

படகில் சுமார் 100 பயணிகளுடன் சரக்குகளும் இருந்ததாக டங்கனிகா மாகாண போக்குவரத்து அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி தெரிவித்துள்ளார்.

இதுவரை 49 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், காங்கோவில் இடம்பெறும் பல படகு விபத்துகளுக்கு அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

டங்கனிகா ஏரி உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகவும், பைக்கால் ஏரிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆழமான ஏரியாகவும் விளங்குகிறது.

காங்கோவின் தொலைதூரப் பகுதிகளில் சாலை மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதால், மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கு படகுகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

Related Posts