ராமர் பாலம் அருகே புதிய சுற்றுலா படகு சேவை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் காணப்படும் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் புதிய படகு சேவையை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தலைமன்னார் கடற்கரையிலிருந்து 3 வது மணல் திட்டை நோக்கி குறித்த வெள்ளோட்ட ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

காலை 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து விசேட படகுகள் மூலம் 3வது மணல் திட்டை நோக்கி பயணம் இடம் பெற்றது.

இரண்டாவது மணல் திட்டில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் களைப்பாறுவதற்கும், அதில் அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது மணல் திட்டு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்ற போது அவர்களை இங்கு அழைத்து வந்து, இந்த இடத்தில் ஆய்வுகளைச் செய்துவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லக்கூடிய ஒரு நடை முறை முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து விசேட படகுகள் மூலம் கட்டணம் செலுத்தி மூன்றாவது மணல் காட்டிற்குச் சென்று பார்வையிடுவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நடவடிக்கைகள் மூலம் தலைமன்னாரில் இருக்கின்ற சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, தங்களுடைய வருமானத்தைப் பெருக்க கூடிய வகையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Related Posts