ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் உள்ளூர் விமான சேவையில் ஈடுபட்ட Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9S-GUC என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட இந்த விமானத்தில் 12 பயணிகளும் 4 பணியாளர்களுமாக மொத்தம் 16 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கின்ஷாசா-என்டோலோவில் இருந்து கிக்விட் மற்றும் இலேபோ நோக்கி உள்ளூர் விமான சேவையில் ஈடுபட்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை முழுமையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாததால், மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை இந்த விவரங்கள் உறுதியற்றவையாகவே கருதப்படுகின்றன.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. விபத்துக்கான காரணங்களையும் சூழ்நிலைகளையும் கண்டறிய அதிகாரப்பூர்வ விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
Font size:
Print
Related Posts
