கனடாவின் மாண்ட்ரீல் நகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
செயிண்ட்-பிரிஜிட்-டிபெர்வில் நகராட்சியில், 10ஆம் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ராங் டெஸ் எகோசைஸ் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து தீப்பிடித்துள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கியூபெக் மாகாண காவல்துறையினர், ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
எனினும், ஹெலிகாப்டர் யாருக்குச் சொந்தமானது, அது எங்கிருந்து புறப்பட்டது, எங்கு சென்றுகொண்டிருந்தது மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் தொடர்பில் உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
விபத்துக்கான முழுமையான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் சம்பவ இடத்திற்கு விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளது.
Font size:
Print
Related Posts
