பவர்பேங்கில் தீ! 198 பயணிகளுடன் சென்ற விமானம் திசைதிருப்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பயணியொருவரின் பவர்பேங்க் பேட்டரியில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, ஃபிராங்பர்ட்டில் இருந்து லிஸ்பனுக்கு சென்ற லுஃப்தான்சா விமானம் பிரான்சின் லியோன் நகருக்கு திசைதிருப்பப்பட்டுள்ளது.

198 பயணிகளுடன் பயணித்த ஏர்பஸ் ஏ321-200 விமானம், போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பவர்பேங்கில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் லித்தியம் பேட்டரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புப் பையில் அதனை பாதுகாப்பாக வைத்ததாக லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி விமானத்தை லியோன் நகருக்கு திசைதிருப்பி, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பின்னர் பயணிகள் ஹோட்டலில் இரவு தங்க வைக்கப்பட்டு, அடுத்த கட்டமாக மீண்டும் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையில், குறிப்பிட்ட பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் பயணிகள் விமானத்தில் இரண்டு பவர்பேங்குகள் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இந்த விமான நிறுவனம் ஜனவரி மாதம் முதல் விமானங்களுக்குள் வெளிப்புற பேட்டரிகளை பயன்படுத்துவதற்கும் சார்ஜ் செய்வதற்கும் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts